கோவை: கோவை மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம், செஷயர் ஹோம்ஸ் மனநல காப்பகம், ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி சமூக பணி துறையினர் இணைந்து மாற்று திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த முகாமில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர். இந்த வேலை வாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமனி துவக்கி வைத்தார். கோவை மாவட்டத்தில் உள்ள மருத்துவனை, காப்பீட்டு நிறுவனங்கள், ஜவுளித்துறை நிறுவனங்கள் உட்பட 54 தனியார் நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்து கொண்டன.
சுய தொழில் செய்ய விரும்புவோர் அவர்களது தேவைகள் அணுக வேண்டிய முறைகள் அங்கு வந்திருந்தவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது. மேலும் அங்கு வந்திருந்த மாற்று திறனாளிகளுக்கு பி.எஸ்.ஜி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் அவர்களுக்கு இலவச சோதனை செய்யப்பட்டது.
இது குறித்து செஷயர் மன மல காப்பக தலைவர் கோவிந்தராஜ் பேசுகையில், மாற்று திறனாளிகள் அலுவலகத்துடன் இணைந்து கடந்த 2009ம் ஆண்டு முதல் வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருவதாகவும் இது வரை 12 மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு, இதில் ஆயிரக்கணக்கானோர் பலன் அடைந்து உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு உதவிட 300 மாணவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் என ஏராளமானோர் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்தார். மாற்று திறனாளிகள் நல அலுவலக அதிகாரிகள் பேசுகையில், கோவை மாவட்டத்தில் 47,000க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் பதிவு செய்துள்ளதாகவும் சொந்த தொழில் துவங்க வங்கி கடன், வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளை செய்து வருவதாக தெரிவித்தார்.