ரஜினி அரசியல் தலைவர் அல்ல என தமிழக முதல்வர் தெரிவித்தது சரிதான் - வானதி சீனிவாசன்

கோவை: ரஜினி அரசியல் தலைவர் அல்ல என தமிழக முதல்வர் தெரிவித்தது சரிதான் எனவும் ஜெயலலிதா, கருணாநிதிக்கு பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளதாக தமிழக பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: ரஜினி அரசியல் தலைவர் அல்ல என தமிழக முதல்வர் தெரிவித்தது சரிதான் எனவும் ஜெயலலிதா, கருணாநிதிக்கு பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளதாக தமிழக பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.



பாஜக சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் பெறப்படுவதை கோவை பாஜக அலுவலகத்தில் துவக்கி வைத்த வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சபரிமலை விவகாரத்தில் அதன் பாரம்பரியத்தை கடைபிடிக்க பெண்கள் அனுமதிக்க வேண்டும் எனவும் பெண்கள் இதை புரிந்துகொண்டு கோயிலின் புனிதத்தை காக்க வேண்டும் என்று கூறினார்.

பாஜக தமிழகத்தில் புதிய உத்வேகம் பெற்றுள்ளதாகவும், பாஜகவில் ரஜினி இணைவது பற்றி அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறிய அவர், ரஜினி அரசியல் தலைவர் அல்ல என தமிழக முதல்வர் தெரிவித்தது சரிதான் எனவும் ஜெயலலிதா கருணாநிதிக்கு பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளதாக தெரிவித்தார்.



மேலும், கல்லூரி மாணவ, மாணவியரின் தற்கொலை சம்பவங்கள் சமுதாய மற்றும் அரசியல் சூழலுக்கு உகந்ததல்ல என்றும் உடல் நல பாதுகாப்பு போல மனநலத்தையும் பாதுகாக்க கல்வி நிறுவனங்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.

கோவையில் கட்சி கொடிக்கம்பம் சரிந்து விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்த அவர், பரபரப்பாக பார்க்கப்பட்ட பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டாலும் வழக்கில் இருந்து தப்பிக்க வழியில்லை எனவும் தமிழக அரசு அந்த வழக்கில் கவனமாக இருக்க வேண்டும் என கூறினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...