வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தொடர்வார் - அதிமுக செய்தி தொடர்பாளர்

கோவை: வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தொடர்வார் எனவும், திமுகவில் உட்கட்சி பூசல் தலைவிரித்து ஆடுவதால் உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதாக அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்தார்.

கோவை: வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தொடர்வார் எனவும், திமுகவில் உட்கட்சி பூசல் தலைவிரித்து ஆடுவதால் உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதாக அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்தார்.



கோவையில் பத்திரிகையாளர் மன்றத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 2021ல் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர்ந்து முதலமைச்சராக முன்னிறுத்தி தேர்தலை சந்திப்போம் எனவும் அதில் மகத்தான வெற்றியும் பெறுவோம் என்றார். நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலின் தோல்வியில் இருந்து மு.க.ஸ்டாலின் இன்னும் மீளவில்லை எனவும் தமிழகத்தில் தற்போது அரசியல் வெற்றிடம் இல்லை என்றவர், சினிமா துறையில் தான் தற்போது வெற்றிடம் உள்ளதாக தெரிவித்தார்.

எம் ஜி ஆர், சிவாஜிக்கு பிறகு தமிழக சினிமா துறையில் தொடர்ந்து வெற்றிடம் உள்ளது எனவும் மக்களால் ஏற்று கொள்ளப்பட்ட ஆட்சியே தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது என்று தெரிவித்த அவர், தமிழக அரசால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அடுத்த கட்ட நகர்வு நீதிமன்றத்தின் கையில் தான் உள்ளது என்று கூறினார்.

மேலும், அதிமுகவின் ஒட்டுமொத்த நிர்வாகிகள், தொண்டர்கள் சம்மதத்தோடு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக தேர்தலை சந்திக்க உள்ளோம் எனவும் அதிமுக தற்போது தெளிவான தலைமையில் இயங்கிக் கொண்டிருப்பதாகவும் அதிமுக விற்கும் சசிகலாவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று தெரிவித்தார். 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...