கோவை: மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து தண்டவாளத்தில் பாறை விழுந்ததால் இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி இயக்கப்படும் மலை ரயில் போக்குவரத்து யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய சின்னம். அடர்ந்த வனத்தில் பயணிக்கும் இந்த மலை ரயிலில் பயணம் செய்து காடுகளில் உள்ள இயற்கை அழகினை கண்டு ரசிக்கவும் குகைகளில் புகுந்து செல்லும் மலை குகைகளை காணவும் உள்நாடு மட்டுமின்றி ஏராளமான வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளும் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், பருவமழை துவங்கியது முதலே மலை ரயில் பாதை அமைந்துள்ள மலைப்பகுதியில் அவ்வப்போது மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் மலைரயில் தொடர்ந்து இயக்க முடியாமல் அடிக்கடி ரத்து செய்யப்படுவது தொடர் கதையாக மாறிவருகிறது.
வடகிழக்கு பருவமழை துவங்கியது முதலே தற்போது வரை ஜந்து முறைக்கும் மேல் ரயில் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணயாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இறுதியாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ரயில் பாதையில் பாறை உருண்டு தண்டவாளம் சேதமானதால் இரு தினங்களாக ரத்து செய்யப்பட்ட மலை ரயில் நேற்று மீண்டும் துவங்கிய நிலையில், இன்று மீண்டும் ஹில்கிரோ ஆடர்லி ரயில்நிலையம் இடையே மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் விழுந்தது. இதனால் இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு புறப்பட வேண்டிய மலை ரயில் இறுதியில் இன்றும் ரத்து செய்யப்பட்டது.
இதனால் மலை ரயில் பயணித்து இயற்கை அழகினை கண்டு ரசிக்கக் காத்திருந்த சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.