கோவை: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை கண்டித்து பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அவ்வமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாபர் மசூதியை இடிப்பு வழக்கில் ராமர் கோவில் கட்ட அனுமதியளித்து இருப்பது நியாயமற்றது எனவும் இவ்வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும், பாபர் மசூதியை இடித்தது குற்றமென உச்சநீதிமன்ற தீர்ப்பில் உள்ளதால் இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோஷமிட்டனர். இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.