திருப்பூர்: திருப்பூர் அருகே வேலம்பாளையம் பகுதியில் முறையான அனுமதியின்றி வெவ்வேறு நிறுவனங்களின் பெயர்களில் செயல்பட்ட குடிநீர் உற்பத்தி நிறுவனத்திற்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருப்பூர் அருகே வேலம்பாளையம் பகுதியில் போலியாக குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனம் செயல்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து மாவட்ட பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாவட்ட நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் குடிநீர் விற்பனை நிலையத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, இந்திய தர கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அனுமதி பெறாமல் போலியாக குடிநீர் தயாரித்து வெவ்வேறு நிறுவனங்களின் பெயரில் விற்பனை செய்தது தெரிய வந்ததையடுத்து, அதிகாரிகள் போலியாக செயல்பட்ட குடிநீர் நிறுவனத்திற்கு சீல் வைத்து, வெவ்வேறு நிறுவனங்களின் பெயரில் 20 லிட்டர் கொள்ளளவு உள்ள 23 கேன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கினர்.