நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் பேருந்து நிலையம் மேற்புறமுள்ள ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் பாறைகளை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த பலத்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், கோத்தகிரி பேருந்து நிலையத்தில் மேல் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் அங்கிருந்து மண் குவியல்கள் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் விழுந்தது. இரவுநேரம் என்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அப்பாேது இந்த மண் குவியல்களை மட்டும் பேரூராட்சி நிர்வாகம் அகற்றியது.

இந்நிலையில், மண் குவியல்கள் கீழே இறங்கியதால் தற்போது பாறைகள் ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. கீழ்ப்பகுதியில் பேரூராட்சியின் சார்பில் கட்டப்பட்ட பேருந்து நிலையம், வங்கி ஏடிஎம், தாய்மார்கள் பாலூட்டும் அறை போன்றவை இருப்பதால் பெரும் விபத்துக்கள் ஏற்படும் முன் இந்த பாறைகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.