ஐ.ஐ.டி மாணவி மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் - எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்

கோவை: ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப் மரணத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.


கோவை: ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப் மரணத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் தெரிவித்ததாவது:-

ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப் மரணத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்றும் பாத்திமா லத்தீப் மரணத்தில் மதரீதியான துன்புறுத்தல் தான் அவரை தற்கொலைக்கு துண்டியுள்ளதாக கூறினார்.

மேலும், பாபர் மசூதி தீர்ப்பு குறித்து பேசிய அவர், தீர்ப்பு குறித்து மறுபரிசீலனை செய்து சட்டத்தின் அடிப்படையில் நீதி வழங்க வேண்டும் எனவும் தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியது, தீர்ப்பே தவிர நீதியல்ல எனவும் அயோத்தி - பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் அரசியல் அழுத்தம் இருப்பதாக தெரிவித்தார்.

வரும் நவம்பர் 18ம் தேதி உயர்மின் கோபுரத்துக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு எஸ்..டி.பி.ஐ கட்சியினர் ஆதரவு அளிக்கும் எனவும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்திற்கு மாற்றாக வழங்கப்படும் ஐந்து ஏக்கர் நிலத்தை பெறக் கூடாது என்றும் பாபர் மசூதி தீர்ப்பு மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என கூறினார்.

மேலும், கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....