தேர்தலுக்கு மட்டும் இல்லாமல் எப்போதும் மக்களுக்காக பணியாற்றும் கட்சி அ.தி.மு.க - அமைச்சர் எஸ்.பி வேலுமணி

கோவை: தேர்தலுக்கு மட்டும் இல்லாமல் எப்போதும் மக்களுக்காக பணியாற்றும் கட்சி அ.தி.மு.க என காரமடை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார்.

கோவை: தேர்தலுக்கு மட்டும் இல்லாமல் எப்போதும் மக்களுக்காக பணியாற்றும் கட்சி அ.தி.மு.க என காரமடை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடையில் தமிழக அரசின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அரசுப்பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய்த்துறை சார்பில் ஆட்சியர் கு.ராசாமணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டு 1511 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, விவசாயக் கடன், விலையில்லா பசுமாடு, விலையில்லா கோழிகள், தையல் இயந்திரங்கள் அம்மா இருசக்கர வாகனம், மகளிர் சுய உதவிகளுக்கு கடனுதவி போன்றவை ஏழு கோடியே நாற்பது லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பயனாளிகளுக்கு வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒன்பது ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சியில் ஆறாயிரம் கோடி மதிப்பிலான மக்களின் அடிப்படை வசதிகளான சாலை, மேம்பாலங்கள், குடிநீர் திட்டம் என ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றபட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தேர்தலுக்கு மட்டும் இல்லாமல் எப்போதும் மக்களுக்காக பணியாற்றும் கட்சி அ.தி.மு.க எனவும் மக்களவை தேர்தலில் அ.தி.மு.கவை தவிர்த்து தி.மு.கவுக்கு மக்கள் வாக்களித்தாலும், தற்போது அவர்களால் எவ்வித பயனும் இல்லை என மக்கள் உணர்ந்துகொண்டதால் தான் நாங்குநேரி மற்றும் விக்கரவாண்டி இடைத் தேர்தலில் அ.தி.மு.கவை மாபெரும் வெற்றி பெற செய்தனர் என குறிப்பிட்டார்.

எழுபது ஆண்டுகால கணவு திட்டமான அவினாசி அத்திக்கடவு திட்டத்தை அ.தி.மு.க அரசு தற்போது நிறைவேற்றியுள்ளதாகவும் இதில் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ். குளம் போன்ற பகுதிகள் விடுபட்டுள்ளது குறித்து முதல்வரிடம் எடுத்துச் சென்றுள்ளதாக கூறிய அவர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விடுபட்ட பகுதிகளுக்கு அத்திக்கடவு இரண்டு திட்டம் என தனித் திட்டம் ஏற்படுத்தி கொடுத்துள்ளதாகவும் அதற்கான குழுவும் அமைக்கப்பட்டுள்ளதால் தலைமடை பகுதி விடுபட்டுள்ளதாக விவசாயிகள் கவலையடைய தேவையில்லை என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே சின்னராஜ், கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....