நடப்பாண்டில் தேசிய அளவில் 100.63 கோடி கிலோ தேயிலை உற்பத்தி: தமிழகத்தில் கடும் வீழ்ச்சி

நீலகிரி: தேசிய அளவில் கடந்த, 9 மாதங்களில், 100.63 கோடி கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.இந்த அளவு, கடந்த ஆண்டு, 97.92 கோடி கிலோவாக இருந்தது.அதில், வட மாநில உற்பத்தி, 85.24 கோடி கிலோ இருந்தது. அதே நேரத்தில்,தென் மாநிலங்களில், கடந்த ஆண்டு, 15.85 கோடி கிலோ உற்பத்தியான நிலையில், நடப்பாண்டில் இதுவரை, 15.34 கோடி கிலோவாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி: தேசிய அளவில் கடந்த, 9 மாதங்களில், 100.63 கோடி கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.இந்த அளவு, கடந்த ஆண்டு, 97.92 கோடி கிலோவாக இருந்தது.அதில், வட மாநில உற்பத்தி, 85.24 கோடி கிலோ இருந்தது. அதே நேரத்தில்,தென் மாநிலங்களில், கடந்த ஆண்டு, 15.85 கோடி கிலோ உற்பத்தியான நிலையில், நடப்பாண்டில் இதுவரை, 15.34 கோடி கிலோவாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.



தென் மாநில தேயிலை தூள் உற்பத்தி வீழ்ச்சி அடைந்த போதிலும், வட மாநிலங்களின் உற்பத்தி கணிசமாக உயர்ந்ததால், நாட்டின் மொத்த உற்பத்தி உயர்ந்துள்ளது.அதில், தமிழகத்தில், 11.36 கோடி கிலோ உற்பத்தி இருந்த நிலையில், இந்த ஆண்டு, 10.93 கோடி கிலோ உற்பத்தியானது. 43 லட்சம் கிலோ வீழ்ச்சி கண்டது.



இதுகுறித்து சர்வதேச மேலாண் மை ஆலோசகர் சுந்தர் பேசுகையில், ''தமிழகத்தின் சீதோஷ்ண நிலை, தேயிலை துாள் உற்பத்திக்கு உகந்ததாக இல்லாதது, இதற்கு முக்கிய காரணமாகும்.

ஆனால், நாட்டின் மொத்த உற்பத்தி கணிசமாக உயர்ந்து வரும் சூழ்நிலையில், நடப்பாண்டின் உற்பத்தி கடந்த ஆண்டைவிட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .கடந்த ஆண்டு, 12 மாதங்களில், நாட்டின் தேயிலை உற்பத்தி, 133.86 கோடி கிலோவாக இருந்த நிலையில், இந்த ஆண்டு, மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், அந்த உற்பத்தி சரித்திரத்திலேயே, உயர்ந்த அளவாக இருக்கும்,'' என்றார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....