கோவை: கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் குறிச்சி குளம் வந்துள்ள நிலையில் ரூ.60 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, குமாரசாமி குளம், செல்வ சிந்தாமணி குளம், பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளங்கள் என 8 குளங்கள் உள்ளன.
இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பொதுப்பணி துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள கோவை குறிச்சி குளத்தை மாநகராட்சி கட்டுப்பாட்டில் கேட்டு, மாநகராட்சி நிர்வாகம் சார்பாக அதற்கான பணிகள் செய்யப்பட்டன. இந்நிலையில் தற்போது பொதுப்பணித்துறை குறிச்சி குளத்தை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கூறுகையில், குறிச்சி குளம் இனி மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும். இதில் ரூ.60 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அதற்கான வரைவு அறிக்கை தயார் செய்யப்பட உள்ளதாக கூறினார்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், "குறிச்சி குளம் கரையை சேதப்படுத்தக்கூடாது, கழிவுநீர் கலக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம்," என்றனர்.