குளம் போல் காட்சியளிக்கும் கழிவுநீர்; நோய் தொற்று ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோவை: கோவை உக்கடம் கழிவு நீர் பண்ணையில் கழிவுகள் அப்புறப்படுத்த வசதியில்லாமல் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீரை உடனடியாக சீர் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: கோவை உக்கடம் கழிவு நீர் பண்ணையில் கழிவுகள் அப்புறப்படுத்த வசதியில்லாமல் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீரை உடனடியாக சீர் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் பாதாள சாக்கடை தண்ணீரைச் சுத்திகரிக்க உக்கடம், ஒண்டிப்புதூர், நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதிகளில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டது.



அதில், உக்கடத்தில் மட்டும் சுத்திகரிப்பு நிலையம் தற்போது செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 3 கோடி லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது. ஒண்டிப்புதூர் சுத்திகரிப்பு நிலையம் சோதனை அடிப்படையில் செயல்பட்டு அங்கு தினமும் 50 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. நஞ்சுண்டாபுரத்திலும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில், உக்கடம் கழிவுநீர் பண்ணையில் கழிவுகள் அப்புறப்படுத்த வசதியில்லாமல் கழிவுகள் மற்றும் கழிவுநீர் அங்கேயே குளம் போல் தேங்கி உள்ளது. தேங்கிய கழிவு நீர் பொன்விழா நகர் சந்திப்பில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலில் கலக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கெடு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியில் வசித்து வரும் சாதிக் பாட்ஷா கூறுகையில், ‘‘உக்கடம் பகுதியில் கழிவுநீர் பண்ணையில் கழிவு நீர், கழிவுகள் மற்றும் குப்பைகள் லாரிகள் மூலமாக தினசரி கொட்டப்பட்டு வருகிறது. கழிவு நீர் மற்றும் கழிவுகள் அப்புறப்படுத்த போதுமான வசதியில்லாமல் அங்கேயே குளம் போல் தேங்கி இருக்கும் கழிவு நீர் மற்றும் கழிவுகள், பிலால் நகர், பிலால் எஸ்டேட் பின்புறம், பொன்விழா நகர், அற்புதம் நகர், அன்பு நகர் மற்றும் அருள் நகர் சாலை கடைசி வரை செல்கிறது. இந்த பகுதிகளின் குடியிருப்புகளில் சுமார் 5000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் உள்ளதால், உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் இதனை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘உக்கடம் கழிவுநீர் பண்ணையில் இருந்து சுத்திகரிப்பு செய்யப்படும் தண்ணீர், வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு செய்ய கழிவுநீர் கொண்டு செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே கழிவுநீர்கள் தேங்குகிறது என்றும் அதனை உடனடியாக சீர் செய்ய மாநகராட்சி நிர்வாகம் அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது,’’ என்று கூறினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...