கே.என்.ஜீ புதூர் - கவுண்டம்பாளையம் இணைப்பு சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு; தார்சாலை அமைக்க கோரிக்கை

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 6வது வார்டு கே.என்.ஜீ புதூர் - கவுண்டம்பாளையம் இணைப்பு சாலையில் தார்சாலை மற்றும் தெருவிளக்கு அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 6வது வார்டு கே.என்.ஜீ புதூர் - கவுண்டம்பாளையம் இணைப்பு சாலையில் தார்சாலை மற்றும் தெருவிளக்கு அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை மாநகராட்சிக்குட்பட்ட 6வது வார்டு பகுதியில் கே.என்.ஜீ புதூர் உள்ளது. இங்கு சுமார் 400க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கே.என்.ஜீ புதூரில் இருந்து கவுண்டம்பாளையம் செல்லும் 350 மீட்டர் இணைப்பு சாலையானது, பல ஆண்டுகளாக பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. ஆனால், இதுவரை தார்சாலை அமைக்கப்படாமல் மண் சாலையாகவே உள்ளது.



மேலும், தெருவிளக்குகளும் அமைக்கப்படாமல், மண் சாலையின் இருபுறங்களிலும் செடிகள் சூழ்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அருகில் உள்ள தொழிற்சாலைகள், திருமண மண்டபங்கள், கறிக்கடைகள், வீடுகள் போன்றவற்றில் இருந்து குப்பைகளைக் கொண்டு வந்து சிலர் அங்கேயே கொட்டிச் செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.



இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கே.என்.ஜீ புதூர் - கவுண்டம்பாளையம் இணைப்பு சாலையினை பிரதான சாலையாக கொண்டு பயன்படுத்தி வருவதாகவும் இப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள், கல்லூரியில் பயிலும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி வாகனங்கள் பெரும்பாலும் இச்சாலையினை பிரதான சாலையாக பயன்படுத்தி வருவதாக கூறினர்.

மேலும், சோமையம்பாளையம் ஊராட்சி பகுதிகளில் உள்ள தொழிற்சாலை கழிவுகள், திருமண மண்டப கழிவுகள், கட்டிடக் கழிவுகள் மற்றும் கோழிகளின் கழிவுகள் போன்ற தேவையற்ற கழிவுகளைக் கொட்டி தீ வைத்து எரிப்பதால் காற்று மாசுபடுவதோடு, துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு தொற்று நோய்கள் ஏற்படுவதாக தெரிவித்தனர்.

இதனால் கே.என்.ஜீ புதூர் - கவுண்டம்பாளையம் இணைப்புச்சாலையில் தார்சாலை அமைத்தும் தெருவிளக்கு அமைத்தும் சுற்றுசூழலை பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளன

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....