கோவை: கோவை மாவட்டம் ஓசூர் சாலையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகின்றன. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றார்.

கோவை மாநகராட்சி பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை உள்ளிட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் வார்டு கவுன்சிலர்களுக்கான விருப்ப மனுக்களை காலை 10 மணி முதல் கோவை அ.தி.மு.க. அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
மேயர் பதவிக்கான விருப்ப மனு கட்டணம் 25 ஆயிரம் ரூபாய், வார்டு உறுப்பினர் பதவிக்கான விருப்ப மனு கட்டணம் 5 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகராட்சி தலைவர் பதவிக்கு 10 ஆயிரம் ரூபாயும், நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு 2 ஆயிரத்து 500 ரூபாயும், இதேபோல் பேரூராட்சி தலைவர் பதவிக்கு 5 ஆயிரம் ரூபாயும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆயிரத்து 500 ரூபாயும் விண்ணப்பக் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், 50 ஆண்டுகாலம் இல்லாத வளர்ச்சியை இந்த அரசு தந்துள்ளது எனவும் விக்கிரவாண்டி, நாங்குநேரியில் பெற்ற சிறப்பான வெற்றி போல் கோவை மாவட்ட மக்கள், மேயர் உட்பட பல்வேறு பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் மட்டுமில்லாது, கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் வாக்களிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து தமிழகத்தில் வெற்றிடத்தை முதல்வர் எடப்பாடியார் நிரப்பிவிட்டதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.