திருப்பூர்: திருப்பூரில் பள்ளி மாணவ, மாணவிகள் கொண்டு வரும் பயன்படுத்தப்படாத பழைய பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் துவங்கி வைத்தார்.

நெகிழி இல்லா திருப்பூரை உருவாக்க மாவட்ட நிர்வாகமும் பல்வேறு சமூக அமைப்புகளும் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் அரசு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் கொண்டு வரும் பழைய பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பென்சில் வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் துவங்கி வைத்தார்.

மாணவ, மாணவிகள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தப்படாமல் வைத்திருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்து கொடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் பென்சில் உள்ளிட்ட பயனுள்ள பொருட்களை வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்த மாவட்ட ஆட்சியர், திருப்பூரில் உள்ள 1374 அரசுப் பள்ளிகளிலும் 600 தனியார் பள்ளிகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், அதிகப்படியான பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரும் மாணவ மாணவிக்கு எலெக்ட்ரிக் சைக்கிள் வழங்க இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்தார்.