குழந்தைகள் பாதுகாப்பை அதிகப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் - மாவட்ட ஆட்சியர்

கோவை: இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பை அதிகப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அனைத்துப் பள்ளிகளிலும் ஏற்படுத்த வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

கோவை: இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பை அதிகப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அனைத்துப் பள்ளிகளிலும் ஏற்படுத்த வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், குழந்தைகள் தினமான இன்று பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் அநீதிகளை தட்டிக் கேட்க வேண்டும் என்று 1098 என்ற இலவச தொலைபேசி எண் செயல்பட்டு வருகிறது. இதில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 3200க்கும் மேற்பட்ட தகவல்களால் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகமாக போக்சோ மட்டும் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

1098 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் காணும் குழந்தைகள் சம்மந்தப்பட்ட தகவல்களை தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர்களின் பெயர்கள் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று கூறிய அவர், அனைத்து பள்ளிகளிலும் இதற்குண்டான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்றார்.

மேலும், குழந்தைகள் அனைவரும் தங்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு காண 1098 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு பிரச்சினைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், குழந்தைகள் உதவிக்குழு மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....