நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஆதிவாசி மக்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வரலாம் என சமூக ஆர்வலர் அப்சரா தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் ஆதிவாசி சிறுவர் சிறுமியரின் ஆண்டு விழா கோத்தகிரி ஆதிவாசிகள் நல சங்க அமைப்பான நாவா சார்பில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட சமூகசேவகி திருநங்கை அப்சரா பேசுகையில், வாழ்க்கையில் தொடர் முயற்சி மேற்கொண்டால் மிக நிச்சயமாக நல்ல இடத்தை அடைய முடியும் என்றார்.
மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கொடுத்த ஆதரவால், தான் தற்போது சமூகத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும் கல்வியிலும் விளையாட்டிலும் பெற்றோர்கள் ஊக்கம் அளித்தால் குழந்தைகள் நல்ல நிலையை அடைவார்கள் என்றும் எந்த ஆட்சி வந்தாலும் ஆதிவாசி மக்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களின் வாழ்வாதாரம் மேலோங்கச் செய்யவேண்டும் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், ஆதிவாசிகள் நல சங்க செயலாளர் ஆல்வாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விக்டோரியா ஆம்ஸ்ட்ராங் பள்ளி ஆதிவாசி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் மாணவ, மாணவிகளின் இயற்கையை குறித்த விழிப்புணர்வு குறு நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விக்டோரியா ஆம்ஸ்ட்ராங்க் ஆதிவாசிகள் பள்ளி இயக்குனர் விஜயகுமார், பள்ளியின் முதல்வர் பூவிழி உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.