சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது - அர்ஜுன் சம்பத்

கோவை: சபரிமலை ஐயப்பன் கோயில் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது என்றும் அதைப் பாதுகாக்க மத்திய அரசாங்கம் சிறப்புச் சட்டம் கொண்டு வரவேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.


கோவை: சபரிமலை ஐயப்பன் கோயில் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது என்றும் அதைப் பாதுகாக்க மத்திய அரசாங்கம் சிறப்புச் சட்டம் கொண்டு வரவேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், சபரிமலை ஐயப்பன் கோயில் குறித்த தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதுடன் உலகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.

மேலும், கடந்த ஆண்டு கேரள முதல்வர் பினராயி விஜயன், பெண்ணியம் பேசும் பெண்களை வைத்து, திட்டமிட்டு ஐயப்பன் கோவிலுக்குள் நுழையும் கொடூரத்தை நடத்தினார். அதேபோல, இந்த ஆண்டும் அதே முயற்சியில் ஈடுபடுவார் எனவும் அதே சமயம், ஐயப்ப பக்தர்களாகிய நாங்கள் சபரிமலையின் புனிதம் காப்போம் என்று கூறிய அவர், இதற்கான புனித அறப்போராட்டம் தொடரும் என்றார்.

மேலும், மத்திய அரசாங்கம் ஐயப்பன் கோவில் மலையின் புனிதம் கெடுப்பதை வேடிக்கை பார்க்கக் கூடாது எனவும் சபரிமலையை பாதுகாக்க மத்திய அரசாங்கம் சிறப்புச் சட்டம் உருவாக்க வேண்டும் என தெரிவித்த அவர், சபரிமலையை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....