நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடியில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் மீட்கப்பட்ட 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு மசினகுடி வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.

மிகவும் விஷத்தன்மை கொண்ட இந்த பாம்பு குறித்து தகவல் கிடைத்ததும், பாம்பைப் பிடிக்கும் நிபுணர்களான முரளி மற்றும் சக்கரை சம்பவ இடத்திற்கு வந்து பாம்பைப் பிடித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரி பீட்டர் பாபு தலைமையிலான குழு பாம்பை மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தது.
இந்த வகை பாம்பின் விஷம், கடித்தவுடன் உடனடியாக நரம்பு மண்டலத்தைத் தாக்கி செயலிழக்கச் செய்யும் தன்மை கொண்டது. மனிதரைக் கடித்தவுடன் தசைகளைச் செயலற்றதாக்கி ஏறத்தாழ 6-8 மணிநேரத்திற்குள் மரணம் நிச்சயம் என்றும் இதனால் இறப்பு விகிதம் மிக அதிகம் என்று கூறப்படுகிறது.