கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 70 அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களை ஒருங்கிணைத்து குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக 15 நிமிடம் இடைவிடாது சிரித்து உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அபயம் அகாடமி மற்றும் அம்மா பகவான் பவுன்டேசன் இணைந்து தொடர் சிரிப்பு யோகா பயிற்சியை மேட்டுப்பாளையத்தில் உள்ள மகாஜன மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தியது. இதில், ஒரே இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒருங்கிணைத்து சிரித்து, சிரிப்பு யோகா என்ற இந்த பயிற்சியினை மேற்கொண்டனர்.
மேலும், மேட்டுப்பாளையத்தின் பல்வேறு அரசுப்பள்ளிகளில் அந்தந்த வளாகங்களிலேயே இந்த சாதனை முயற்சியானது மேற்கொள்ளப்பட்டது. அபயம் அகாடமி நிர்வாகி உமாராணி விஜயகுமார் பள்ளி குழந்தைகளுக்கு சிரிப்பு யோக பயிற்சியை துவக்கி வைத்தார்.

பள்ளியில் படிக்கும் சிறுவயது மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் உளவியல் கோளாறு, மன அழுத்தம் போன்றவை இந்த தொடர் சிரிப்பு யோகா மூலமும் கை தட்டல்கள் மூலம் விடுபட உதவும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்த முயற்சி புதிய உலக சாதனை முயற்சியாக, கலாம் புக்ஆப் ரெக்கார்டில் பதிவு செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. மேட்டுப்பாளையம் முழுவதும் இந்த சாதனை முயற்சியில் பத்தாயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கலாம் புக் ஆப் ரெக்காடு தலைமை அதிகாரி முன்பு நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் தேசிங், ரமேஷ்பாபு, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.