கொடிகம்பம் விழுந்து பெண் விபத்தில் சிக்கிய விவகாரம்; முதலமைச்சரின் பதில் அவருடைய பொறுப்பிற்கு பொருத்தமானதல்ல - முத்தரசன்

திருப்பூர்: கோவையில் கொடிகம்பம் விழுந்து மாணவியின் கால் முறிவு ஏற்பட்ட விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் தனக்கு அந்த தகவலே தெரியவில்லை என்று பொறுப்பற்ற முறையில் பதில் கூறி வருவது அவருடைய பொறுப்பிற்கு பொருத்தமானதல்ல என்று திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

திருப்பூர்: கோவையில் கொடிகம்பம் விழுந்து மாணவியின் கால் முறிவு ஏற்பட்ட விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் தனக்கு அந்த தகவலே தெரியவில்லை என்று பொறுப்பற்ற முறையில் பதில் கூறி வருவது அவருடைய பொறுப்பிற்கு பொருத்தமானதல்ல என்று திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

திருப்பூரில் வேலம்பாலையம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஜீவா இல்லம் புதிய கட்டிடம் திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டதோடு, ஜீவா இல்ல புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக தேர்தல் ஆணையம் டிசம்பர் மாதத்திற்குள்ளாகத் தேர்தலை நடத்துவோம் என உறுதிபட தெரிவித்துள்ள நிலையில், தற்போது தேர்தல் நடைபெறும் என அறிவிப்பானது வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் அமைச்சர்களுடைய அறிவிப்புகளாக இருக்கட்டும், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பாக இருக்கட்டும், இதில் ஒரு வெளிப்படைத்தன்மையானது இல்லை என்று குற்றம்சாட்டினார்.

புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் அவற்றிற்கெல்லாம் வார்டுகள் அமைக்கப்பட்டு இருக்கிறதா என்பது தெரியவில்லை, ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் நகரப்புற வார்டுகள் முழுமையாகப் பிரிக்கப்பட்டு விட்டதா, எந்தெந்த வார்டுகள் எந்த பகுதியினருக்கு, பொதுவார்டா, பெண்களுக்கானதா, தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கான தா என்ற முழு விபரம் இதுவரை அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கவில்லை என்றும் இவ்வாறு வெளிப்படைத்தன்மை இல்லாமல், தேர்தல் நடைபெறும் என்று கூறி வருவது ஒருவித ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.

ஜனநாயக முறையில் நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூறிய அவர், கோவையில் கொடிகம்பம் விழுந்து மாணவியின் கால் முறிவு ஏற்பட்டுள்ளது குறித்து அனைத்துக் கட்சிகளும் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் எனக்கு அந்த தகவலே தெரியவில்லை என்று பொறுப்பற்ற முறையில் பதில் கூறி வருவது அவருடைய பொறுப்பிற்கு பொருத்தமானதல்ல என்றார்.

அதேபோல், அமைச்சர் ஒருவர் பேசுகையில், விபத்துக்கள் நடக்கும் அப்படி நடந்தால் என்ன செய்வது இறந்துவிட்டால் அஞ்சலி செலுத்துவோம் என கூறிவரும் பொறுப்பற்ற செயல்களைக் கைவிட வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடிய பேனர்கள் மற்றும் கொடிகள் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...