2 நாட்களுக்கு பின் மீண்டும் துவங்கிய மலை ரயில் சேவை; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கோவை: மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் பாதையில் மண்சரிவு காரணமாக நிறுத்தப்பட்ட மலை ரயில் போக்குவரத்து இன்று மீண்டும் துவங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கோவை: மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் பாதையில் மண்சரிவு காரணமாக நிறுத்தப்பட்ட மலை ரயில் போக்குவரத்து இன்று மீண்டும் துவங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலைரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. உலக புகழ்பெற்ற இந்த மலை ரயிலில் பயணித்து அடர்ந்த வனத்தில் உள்ள வானுயர்ந்த மரங்கள், காட்டாறுகள், வன விலங்குகள், ரயில் குகைகள் என இயற்கை அழகினை கண்டு ரசிக்க இந்தியா மட்டுமின்றி உலக அளவில் ஏராளமான வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளும் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் வட கிழக்கு பருவமழை காரணமாக மலை ரயில் பாதையில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு ரயில் தண்டவாளத்தில் விழுந்ததால் ரயில் பாதை சேதமடைந்தது. ஆடர்லி, ஹில்கிரோ ரயில்நிலையங்கள் இடையே பாறை மற்றும் மண்சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாளம் சேதமானதால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் சென்ற மலை ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

இதனையடுத்து, சேதமான ரயில் தண்டவாளங்களை ரயில்வே ஊழியர்கள் கடந்த இரு தினங்களாக சீரமைத்து வந்தனர். நேற்று மாலை பணிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் இன்று வழக்கம் போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரயில் போக்குவரத்து மீண்டும் இயக்கப்பட்டது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து வழக்கம் போல் காலை 7.15 மணியளவில் புறப்பட்ட மலை ரயிலானது, 150க்கும் மேற்பட்டோர் சுற்றுலா பயணிகளுடன் குன்னூர் சென்றது. இதனால் முன்பதிவு செய்து கடந்த இரு நாட்களாக காத்திருந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். 

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....