டெல்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

36 விமானம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் முறைகேடு நடக்கவில்லை என்ற தீர்ப்பை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும், பிரதமர் மோடியை *காவலாளியே திருடன்” என உச்சநீதிமன்றம் கூறியதாக ராகுல்காந்தி பேசியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை முடித்துவைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்ததிற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருந்தார் ராகுல் காந்தி.
ராகுல்காந்திக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை:
நீதிமன்றத் தீர்ப்பு குறித்து பேசும்போது, ராகுல்காந்திக்கு எதிர்காலத்தில் கவனம் தேவை என்று எச்சரித்துள்ள உச்சநீதிமன்றம், ரஃபேல் போர் விமான கொள்முதல் தொடர்பாக விசாரணை நடத்தத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.