கடந்த 29ஆம் தேதி கேரள மாநிலம் மஞ்சகண்டி பகுதியில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், இன்று புதுக்கோட்டையைச் சேர்ந்த மாவோயிஸ்டின் உடல் கோவையில் உடல் தகனம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கடந்த 29ஆம் தேதி கேரள மாநிலம் மஞ்சகண்டி பகுதியில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், இன்று புதுக்கோட்டையைச் சேர்ந்த மாவோயிஸ்டின் உடல் கோவையில் உடல் தகனம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை அருகே உள்ள கேரள மாநிலமான பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மஞ்சகண்டியில் தண்டர்போல்ட் போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கு நடந்த துப்பாக்கி சூட்டில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டு கொள்ளப்பட்டனர்.
இதையடுத்து 4 பேரின் உடல்களும் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது.
இதில் இன்று சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிவாசகத்தின் உடலும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் (எ) கண்ணனின் உடலும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால், இரண்டு மாவோயிஸ்டுகளின் உடல்களும் சொந்த ஊரில் தகனம் செய்ய ஊர் மக்கள் சார்பில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கார்த்திக் என்ற கண்ணனின் உடல் புதுக்கோட்டை மாவட்டத்தில் அடக்கம் செய்யாமல் திருச்சியில் அடக்கம் செய்வதாக சொல்லி வந்த நிலையில், போலீசார் கோவைக்கு கொண்டுவந்து அடக்கம் செய்யமுற்பட்டு உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று இரவு சுமார் 9;30 மணி அளவில் கார்த்திக் என்ற கண்ணனின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள மின் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுமார் 40 நிமிடங்கள் கழித்து அவரது உறவினர்கள் மின் மயானத்திற்கு வந்தனர்.
இதில் கண்ணீருடன் வாகனத்தில் இருந்து இறங்கிய கார்த்திக்கின் தாய் மீனம்மாள் தனது மகனின் உடலைப் பார்த்து புலம்பியபடி அழுதார். இதைத்தொடர்ந்து கார்த்திக்கின் உடலுக்கு செங்கொடி போர்த்தப்பட்டு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர், அவரது உடல் மின்மயானத்திற்க்குள் வைத்து எரியூட்டப்பட்டது. இந்த தகணத்தில் கார்த்திக் என்ற கண்ணனின்
மூத்த சகோதரர் முருகேசன் ஈம காரியங்களை செய்தார். இதில் அவரது தாயார் மீனம்மாள், மற்றும்
உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
அவர் மரணத்தை பற்றி தாயார் மீனம்மாள் கூறும்போது :-
எனது மகனை பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்தது. தற்போது இப்படி பிணமாக பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவன் அனைவருக்கும் நல்லது தான் செய்தான். ஆனால் அவனுக்கு ஏன் இந்த நிலைமை. அவன் ஏற்கனவே தேசிய பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிறையிலும் இருந்துள்ளான். இதை தொடர்ந்து பத்து ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தான். தற்போது இந்த நிலையில் அவனை பார்ப்பது எனக்கு வேதனையை ஏற்படுத்துகிறது.
அவனுக்கு ஒரு திருமணம் செய்து வைக்க நான் மிகவும் ஆசைப்பட்டேன். ஆனால் அது நடக்காமல் போனது என கண்ணீரைத் துடைத்தபடியே பேசினார் மீனம்மாள்.