கோவை: சக மாணவர்களை துன்புறுத்தக் கூடாது என்பதனை வலியுறுத்தும் விதமாக 2200 மாணவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து உறுதிமொழி ஏற்றியதில் ஏசியன் கப் ரெகார்ட்ஸில் இடம் பெற்றுள்ளனர்.

உலகளவில் துன்புறுத்தல் காரணமாக மனதளவில் குழந்தைகள் அதிகம் பாதிபடைவதோடு சில மாணவர்கள் தற்கொலையும் செய்து கொள்கின்றனர். எனவே, துன்புறுத்தல் பற்றியான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவை தனியார் கல்வி நிறுவனம் சார்பில் பள்ளிக்குழந்தைகள் சக மாணவர்களை துன்புறுத்தக் கூடாது என்பதனை வலியுறுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வடகோவை பகுதியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் இன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சிறு குழந்தைகள் முதல் 12ஆம் வகுப்பு வரையிலான சுமார் 2200 மாணவ, மாணவிகள் பங்கேற்று, சக மாணவர்களை துன்புறுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்று கையெழுத்திட்டனர். இந்த நிகழ்வு ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்ல் பதிவு செய்யப்பட்டது. இதனை
ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பிரதிநிதி பிரதீப்குமார் கலந்துகொண்டு நேரில் நிகழ்ச்சியை பார்வையிட்டார்.

வருங்காலத்தில் இதே போன்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதியேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என ஏசியன் கப் ரெக்கார்ட்ஸ் பிரதிநிதி பிரதீப் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வை ஒட்டி சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவும் பள்ளியில் நடந்தது குறிப்பிடத்தக்கது. சக மாணவர்களை துன்புறுத்தக் கூடாது என்பதனை வலியுறுத்தும் திரைப்படங்கள் விழாவில் திரையிடப்பட்டது.