நீலகிரி: உதகை அருகே 65 கோடி குத்தகை செலுத்தாத தனியார் கோல்ப் கிளப் நிலத்தை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வனத்துறையினர் கையகப்படுத்தினர்

நீலகிரி மாவட்டம் உதகை பிங்கர் போஸ்ட் அருகே ஜிம்கான எனப்படும் தனியார் கோல்ப் கிளப் செயல்பட்டு வருகிறது. இந்த கிளப்பில் பிரபலமான பணக்காரர்கள் மட்டும் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். அங்கு, அவர்கள் தங்க சொகுசு பங்களாவும், கோலஃப் விளையாட 78 ஏக்டரில் பச்சை பசேல் மைதானமும் உள்ளது.

மாநில மற்றும் தேசிய அளவில் போட்டிகள் நடைபெறும் இந்த கோல்ஃப் மைதானம் வனத்துறைக்கு சொந்தமானதாகும். வனத்துறையால் இந்த நிலம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த குத்தகை காலம் முடிந்ததோடு இதுவரை அந்த கிளப் நிர்வாகம் வனத்துறைக்கு 50 காேடி ரூபாயையும், வருவாய்த்துறைக்கு 15 கோடி ரூபாயும் குத்தகை பாக்கி வைத்துள்ளது.
இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோல்ப் கிளப் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை கையகப்படுத்த உத்தரவிட்டனர். இதையடுத்து நீலகிரி வனக்கோட்ட வனத்துறை அதிகாரி குருசாமி மற்றும் சரவணன் ஆகியோர் தனியார் காேல்ஃப் கிளப் நிர்வாகிகளிடமிருந்து முறைப்படி எழுத்து மூலம் நிலத்தை பெற்றுக் கொண்டனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, வனத்துறை வசம் வந்துள்ள 35 எக்டேர் நிலத்தை பாதுகாக்கப்பட்ட நிலமாக வனத்துறை பராமரிக்கும் என்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தனியார் அமைத்திருந்த கம்பி வேலி விரைவில் அகற்றப்படும் என்று தெரிவித்தார்.