கோவை: கோவையில் சமீபத்தில் நடைபெற்ற பட்டாம்பூச்சி மற்றும் தட்டாரப்பூச்சி வகை உயிரினங்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பு முடிவுகளில் மூன்று புதிய பட்டாம்பூச்சி இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக மதிப்பிடப்பட்ட சுமார் 272 வகையான பட்டாம்பூச்சி இனங்களில், இந்த ஆண்டு முடிவில் 195 பட்டாம்பூச்சிகள் மற்றும் 42 வகையான தட்டாரப்பூச்சி இனங்கள் அறியப்பட்டுள்ளன.

கணக்கெடுப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கொண்டு மறுஆய்வு செய்த பின்னர், வரும் நாட்களில் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று பட்டாம்பூச்சிக்கான சட்டத்தின் நிறுவனர் கே.மோகன் பிரசாத் தெரிவித்தார்.

மேலும், கணக்கெடுப்பின் பணியின் போது வைட் டஃப்ட்டு ராயல், மலபார் பேண்டட் பீகாக் மற்றும் காமன் சிலிட் ப்ளூ போன்ற பட்டாம்பூச்சி இனங்கள் முதல் முறையாக இங்கு காணப்பட்டதாக தெரிவித்த அவர், குற்றாலம் மற்றும் பொன்னுத்து ஆகிய இடங்களில் மேற்கொண்ட கணக்கெடுப்பில் 104 வகையான பட்டாம்பூச்சிகளை இனங்கள் அறியப்பட்டுள்ளதாகவும் காரமடையில் 35 வகை இனங்கள் காணப்பட்டதாக அவர் கூறினார்.

கோவை வன பிரிவு மற்றும் பட்டாம்பூச்சிகளுக்கான சட்டம் இணைந்து நடத்திய இந்த ஆய்வில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 51 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.