நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னுார் பிளாக் பிரிட்ஜ் போஸ்டல் குர்ட்டர்ஸ் பகுதியில் காட்டெருமை தாக்கியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னுார் பிளாக் பிரிட்ஜ் போஸ்டல் குர்ட்டர்ஸ் பகுதியில் காட்டெருமை தாக்கியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னுார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் கரடி, சிறுத்தை, காட்டு எருமை உள்ளிட்ட விலங்குகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே வரும் சமயத்தில் அங்கே கூட்டமாக நின்று கொண்டிருந்த காட்டு எருமைகள் பிளாக் பிரிட்ஜ் போஸ்டல் குர்ட்டர்ஸ் பகுதியை சேர்ந்த முதியவர் சைமன் (86) என்பவரை தாக்கியது

இதில் கை, வயிறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் மீட்டு108 ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.