கோவை: வால்பாறையில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள காமராஜ் நகர் பகுதியில் கக்கன் காலணி வாழைத்தோட்டம் உட்பட நகரின் பல பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் நடமாட அச்சப்படுவதோடு, குழந்தைகளும் விளையாட்டுகளை தவிர்த்து வீடுகளிலேயே முடங்கி விடுகின்றனர்.
இந்நிலையில், வால்பாறை பொள்ளாச்சி சாலையில் காமராஜ் நகர் பகுதியிலுள்ள பாலத்தின் தடுப்புச் சுவர் மீது சிறுத்தைப்புலி படுத்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த இருவர் அலறியடித்துக் கொண்டு தப்பினர். தொடர்ந்து மக்கள் அதிகம் பேர் வரவே தேயிலை காட்டிற்குள் ஓடி மறைந்தது.
இதனிடையே, பொதுமக்களிடையே அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.