துடியலூர் அருகே இரவு நேரங்களில் உலா வரும் காட்டு யானைகள்; பொதுமக்கள் பீதி

கோவை: கோவை துடியலூரை அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நள்ளிரவில் 6 காட்டு யானைகள் கூட்டம் குடியிருப்புப் பகுதிகளில் உலாவருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை துடியலூரை அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நள்ளிரவில் 6 காட்டு யானைகள் கூட்டம் குடியிருப்புப் பகுதிகளில் உலாவருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் லட்சுமி நகர் பேஸ் 3 பகுதியில் நேற்று நள்ளிரவில் சுமார் 6 யானைகள் கொண்ட காட்டு யானை கூட்டம் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் வந்ததுள்ளது. யானைகளை பார்த்து அங்கிருந்த தெரு நாய்கள் குறைத்ததால் அதில் கோபம் கொண்ட ஒரு ஆண் யானை நாய்களை துரத்திய காட்சியும் அதனைத் தொடர்ந்து அதனுடன் வந்திருந்த இரண்டு குட்டிகளுடன் கூடிய 5 யானைகள் பின்னால் சென்றதும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

நாய்கள் குறைத்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வெளியே வந்து பார்த்தபோது 6 யானைகள் கொண்ட கூட்டம் குடியிருப்பு பகுதிகளில் சர்வசாதாரணமாக சென்றதைக் கண்டு மிகுந்த அச்சம் அடைந்தனர். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தகவலறிந்த வனத்துறையினர், நள்ளிரவில் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியினை மேற்கொண்டனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, காட்டு யானைகள் மலைப்பகுதியில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இப்பகுதிக்கு உணவு தேடி வருகிறது. எனவே, வனப்பகுதியில் அதற்கான உணவுகளை ஏற்பாடு செய்து விட்டால் அவைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராது என்றும் உயிரிழப்புகள் ஏற்படும் முன் வனப்பகுதிகளில் இருந்து யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் வன எல்லைகளில் அகலிகள் அமைத்துத் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....