கோவை: கோவை அரசு பேருந்தில் பயணி தவற விட்டுச் சென்ற ரூ.69 ஆயிரம் பணத்தை மீட்டு பயணியிடம் ஒப்படைத்த ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் பாராட்டு தெரிவித்தார்.

கோவை தலைமையக கிளையைச் சேர்ந்த TN38N2994, ரூட் எண்.50 என்ற நகர பேருந்தில் நேற்று முன்தினம் (11.11.2019) காலை 10.30 மணிக்கு நாகாலாந்தைச் சேர்ந்த மொசி என்ற பெண் பயணி தான் வைத்திருந்த கைப்பையை மறதியில் தவறவிட்டுவிட்டார்.
அக்கைப்பையினுள் ரூ.69,000/- இருந்ததை அன்று பேருந்தில் பணிபுரிந்த நடத்துநர் ரங்கநாதன், ப.எண்.C21763 மற்றும் ஒட்டுனர் பழனிசாமி, ப.எண்.C27486 ஆகியோர்கள் அப்பணப்பையை எடுத்து தலைமையகத்தில் ஒப்படைத்தனர். அப்பணப்பையின் உரிமையாளர் தவறவிட்டதை அறிந்து பேருந்தில் பயணம் செய்த பயணச்சீட்டை சான்றாக காண்பித்து பணப்பையை பெற்றுக்கொண்டார்.
இவர்களது நேர்மையை பாராட்டி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் (கோவை) லிட்டின் மேலாண் இயக்குநர் அன்பு ஆபிராம், பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.