விவசாயிகளுக்கு பாதிப்பில்லாமல் உயர்மின் கோபுரம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகளுடன் எம்.பி, பி. ஆர்.நடராஜன் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை: விவசாயிகளுக்கு பாதிப்பில்லாமல் உயர்மின் கோபுரம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகளுடன் எம்.பி, பி. ஆர்.நடராஜன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நூறு ஆண்டுகளாக மயான பாதை இன்றி தவிக்கும் வரப்பாளையம் அருந்ததிய மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி சாலை வசதிகளை செய்து தர வேண்டும். மேலும், சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக நகரம் மட்டுமன்றி கிராம பகுதிகள் உள்ளிட்ட சாலைகளும் கடும் சேதமடைந்துள்ளது, இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரின் வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்."

கோவை: விவசாயிகளுக்கு பாதிப்பில்லாமல் உயர்மின் கோபுரம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகளுடன் எம்.பி, பி. ஆர்.நடராஜன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நூறு ஆண்டுகளாக மயான பாதை இன்றி தவிக்கும் வரப்பாளையம் அருந்ததிய மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி சாலை வசதிகளை செய்து தர வேண்டும். மேலும், சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக நகரம் மட்டுமன்றி கிராம பகுதிகள் உள்ளிட்ட சாலைகளும் கடும் சேதமடைந்துள்ளது, இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரின் வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்."



குறிப்பாக, சுல்தான் பேட்டை பகுதியில் உயர் மின் கோபுரம் அமைக்கும் விவகாரத்தில் பவர் கிரிட் நிறுவனம் முன்று பாதைகளை தேர்ந்தெடுத்துள்ளது எனவும், இதில் விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத பகுதியை மட்டும் காட்டி வங்கியில் லோன் வாங்கியுள்ளனர் என குற்றம் சாட்டினார். 

ஆனால், அதற்கு மாறாக தற்போது நிறுவப்படும் பாதை என்பது விவசாயிகள் மற்றும் தென்னை தோப்புகள் மிகுந்த பகுதி, அப்பகுதி வழியாக பவர்கிரிட் நிறுவனம் உயர்மின் கோபரங்கள் அமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகள் துவங்கி உள்ளனர் என கூறிய அவர் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் உயர் மின் கோபுரம் அமைக்க வேண்டும் என்பதை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார். 

மாவட்ட ஆட்சியரும் நேரிடையாக சுல்தான் பேட்டை பகுதியை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்து உள்ளதாகவும், மேலும் விவாசாயிகளும் ஆட்சியரின் உறுதியை ஏற்று கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், இவ்விவகாரம் நீடித்தால் வரும் 18 ஆம் தேதி அனைத்து விவசாயிகளையும் திரட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....