மதுராந்தகம் அருகே மர்ம காய்ச்சல் பரவுகிறது: சிறுவர்கள் உட்பட 13 பேர் மருத்துவமனையில் அனுமதி

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகள் உள்பட 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே ஓச்சேரி காலனியில் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த சில தினங்களாக அடிக்கடி காய்ச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டனர். இன்று காலை இப்பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் உள்பட 13 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். உடனடியாக இவர்கள் அனைவரும் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஒச்சேரி பகுதி மக்கள் கூறியதாவது: ஓச்சேரி காலனியில் உள்ள 2 தெருக்களில் உள்ள குடிநீர் குழாய்களையொட்டி கழிவுநீர் கால்வாய் செல்வதால் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் நிலையுள்ளது.

இதை குடித்தவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம். மதுராந்தகம் நகராட்சி அலுவலர்கள் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரத்துறை அதிகாரிகளும் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்க மருத்துவதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பூனிமாங்காடு அருகே வெங்கடாபுரத்தை சேர்ந்த கோவர்த்தனின் மகள் லதாஞ்சலி (16). இவர் மர்ம காய்ச்சல் பாதிக்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி லதாஞ்சலி பரிதாபமாக இறந்தார். சென்னை பொழிச்சலூர் லட்சுமிநகர் கண்ணகி தெருவை சேர்ந்த முகமதுஇத்திரீஸ் என்பவரின் 2 குழந்தைகள் பாஹீமா (8), முகமது (4) ஆகியோரும் மதுரவாயல் ஆலப்பாக்கம் கார்த்திகேயன் நகரை சேர்ந்த ஆரோக்கிய சாமியின் மகள் லட்சிகா ஏஞ்சல் (6) ஆகியோரும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் 3 பேரும் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...