கோவையில் அங்கன்வாடி கட்டிடங்கள் நிலை குறித்து அறிக்கை கேட்கும் மாவட்ட நிர்வாகம்

கோவை: புதிய கட்டடம் அமைக்கவும், பாழடைந்த கட்டடங்களை சீரமைக்கவும் கோவை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களின் கட்டிட நிலை குறித்து மாவட்ட நிர்வாக அறிக்கை கேட்டுள்ளது.

கோவை: புதிய கட்டடம் அமைக்கவும், பாழடைந்த கட்டடங்களை சீரமைக்கவும் கோவை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களின் கட்டிட நிலை குறித்து மாவட்ட நிர்வாக அறிக்கை கேட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 14 மற்றும் மாநகராட்சியில் 4 என சேர்த்து மொத்தம் 18 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு, இதன் கீழ் 1,697 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் படித்து வருகின்றனர். சமூக நலத் துறையின், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு 3 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இங்கு அடிப்படைக் கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்டவை குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை குழந்தைகள் அங்கன்வாடிகளில் பராமரிக்கப்படுகின்றனர். பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்லும் பெரும்பாலான குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் அங்கன்வாடி மையங்களை நம்பியே உள்ளனர்.

மேலும், மாவட்டத்தில் 177 அங்கன்வாடி மையங்கள் தனியார் கட்டடத்தில் வாடகைக்கு இயங்கி வருகின்றன. இக்கட்டடங்கள் போதிய இடவசதியில்லாமல் மிக நெருக்கடியான நிலையில் காணப்படுவதால் குழந்தைகள் விளையாடுவதற்கு, உறங்குவதற்குமே இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் சொந்த கட்டடம் அமைக்கக்கோரி பல ஆண்டுகளாக துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டும் அரசு கண்டுகொள்ளவில்லை என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது சேதம் அடைந்துள்ள அங்கன்வாடி கட்டிடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிக்கை கேட்டுள்ளது. அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதைப் பொறுத்து சேதம் அடைந்த அங்கன்வாடி கட்டிடங்கள் புதியதாக கட்டப்படுமா அல்லது மறுசீரமைப்பு செய்யப்படுமா என்பது தெரியவரும்.

இது குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘‘சொந்தக் கட்டடங்களில் இயங்கும் நூற்றுக்கும் அதிகமான அங்கன்வாடி மையங்கள் பராமரிப்பில்லாத பழைய கட்டடங்களில் பாதுகாப்பற்ற சூழலில் செயல்பட்டு வருகின்றன. இதனால் குழந்தைகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. புதிய கட்டடம் அமைக்கவும், பாழடைந்த கட்டடங்களைச் சீரமைக்கவும் தற்போது மாவட்ட நிர்வாகம் அறிக்கை கேட்டுள்ளது. விரைவில் சேதமடைந்த கட்டிடங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும்,’’ என்றார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....