கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வளாகத்தில் உள்ள சிவன் ஆலயத்தில் அன்னாபிஷேக விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

மழை வளம் பெருகி, உலகில் உள்ள எல்லா உயிர்களும் குறைவின்றி வாழ வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜப்பசி பௌர்னமியன்று சிவபெருமானை அன்னத்தால் அலங்கரித்து வழிபாடு செய்யப்படுகிறது.
இதன்படி இன்று 150 கிலோ அரிசி சமைக்கப்பட்டு சிறப்பு பூஜையும் அபிஷேகமும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை போற்றி பாடினர்.
தொடர்ந்து பெண்களின் கும்மியாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கும்மியடித்தனர்.

தொடர்ந்து, தீபாராதனை நடைபெற்ற பிறகு, அன்னதானம் வழங்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட சாதம் முறைப்படி நடுமலை ஆற்றில் கரைக்கப்பட்டது. இந்த விழாவில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.