கோவை: கோவை மாவட்டம் குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்ட பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் முனைவர்.சி.நா.மகேஸ்வரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, ஆலோசகர் எஸ்.சம்பத்குமார், மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) என்.முரளி, நிர்வாக பொறியாளர்கள் ஏ.முத்தையா, ரகுபதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் அவர்கள் பேசுகையில்:-
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளான, குறிச்சி மற்றும் குனியமுத்தூர், (வார்டு 87-100) பகுதிகளுக்கான பாதாளசாக்கடை திட்டம் ரூ.591.14கோடியிலும், குடிநீர் திட்டப் பணிகள் ரூ.202.30கோடியிலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டங்கள் குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளின் 14 வார்டுகள் பயன்பெறுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாதாளசாக்கடை திட்டத்தின் சிறப்பு அம்சமாக அனைத்து கழிவு நீரேற்று நிலையங்களிலும் முதன் முறையாக துர்நாற்றம் அகற்றும் கருவி பொருத்தப்பட உள்ளது. மேலும் கழிவுநீர் சேகரிக்கும் குழாய்கள், சாலையில் தோண்டி பதிக்கப்பட்டவுடன், குழிகள் மூடப்பட்டு, சீரான இடைவெளியில் சாலை பகுதியில் கான்கிரீட் தளம் அமைத்து சாலைகள் சீர்செய்யப்பட்டு வருகிறது.குடிநீர் திட்டப்பணிகளுக்காக, இப்பகுதிகளில் 18 புதிய குடிநீர் மேல்நிலை தொட்டிகளும், 2 குடிநீர் சமநிலை தொட்டிகளும், குடிநீர் பகிர்மான குழாய் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக கூறினார்.