மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தேசிய அளவில் 42 லட்சம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் NISHTHA ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம் குன்னூர், கோத்தகிரி, உதகையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 5ம் கட்ட பயிற்சி இன்று நடைபெற்றது. இதில் 150 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் NISHTHA ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம் குன்னூர், கோத்தகிரி, உதகையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 5ம் கட்ட பயிற்சி இன்று நடைபெற்றது. இதில் 150 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



இதுவரை நீலகிரி மாவட்டத்தில் 750 ஆசிரியர்களுக்கு பயிற்சி முடிந்த நிலையில், ஆசிரியர்களுக்கு 12 தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு பாதுகாப்பு உலகம் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி புதிய உத்திகளைப் பயன்படுத்தி மாணவர்களிடம் கல்வியைச் சேர்ப்பது, போக்சோ சட்டம் குறித்து குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவற்றை ஆசிரியர்கள் மூலம் மாணவ மாணவிகளிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வு உள்ள சமுதாயத்தை உருவாக்குவதே NISHTHA. பயிற்சியின் நோக்கம் என தெரிவித்தனர்.

இந்த பயிற்சியை நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசுருதீன் துவக்கிவைத்தார். மாநில கருத்தாளர்கள் விஜயராஜ், ஜெயந்தி, மாலதி, மீனா மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஆனந்த், அமுதா பயிற்சி வழங்கினர்.

மேலும், பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் மகேஷ், பிரபாகரன், சிவராமன், சிவக்குமார், சீலா ஆகியோர் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 1303 அரசு பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும் இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளதாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....