பொள்ளாச்சியில் ரூ.7.85 கோடி மதிப்பில் 2412 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய‌ அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி

கோவை: கோவை மாவட்டம்‌, பொள்ளாச்சி, மகாலிங்கபுரம்‌ மற்றும்‌ வடசித்தூர்‌ ஆகிய இடங்களில்‌ நேற்று நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சரின்‌ சிறப்பு குறைதீர்க்கும்‌ முகாமில்‌ நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி பொதுமக்களிடம்‌ இருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு 2412 பயனாளிகளுக்கு ரூ.7.85 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்‌.

கோவை: கோவை மாவட்டம்‌, பொள்ளாச்சி, மகாலிங்கபுரம்‌ மற்றும்‌ வடசித்தூர்‌ ஆகிய இடங்களில்‌ நேற்று நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சரின்‌ சிறப்பு குறைதீர்க்கும்‌ முகாமில்‌ நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி பொதுமக்களிடம்‌ இருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு 2412 பயனாளிகளுக்கு ரூ.7.85 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்‌.

மேலும்‌, பாரதியார்‌ பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிக்கு ரூ.8 கோடி மதிப்பீட்டில்‌ புதிய கட்டடம்‌ கட்டும்பணி மற்றும்‌ 212 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.72.75 கோடி மதிப்பில்‌ கூட்டுக் குடிநீர்‌ திட்டம்‌ ஆகிய பணிகளுக்கு நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி மற்றும்‌ தமிழ்நாடு சட்டப்பேரவைத்‌ துணைத்‌ தலைவர்‌ பொள்ளாச்சி வி.ஜெயராமன்‌ ஆகியோர்‌ அடிக்கல்‌ நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.



இம்முகாமில்‌, மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி, சட்டமன்ற உறுப்பினர்‌(சூலூர்‌) வி.பி.கந்தசாமி, பாரதியார்‌ பல்கலைக்கழக துணை வேந்தர்‌ முனைவர்‌ பெ.காளிராஜ்‌, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின்‌ திட்ட இயக்குநர்‌ ரமேஷ்குமார்‌, கூட்டுறவு சங்கங்களின்‌ இணைப்பதிவாளர்‌ பழனிச்சாமி, வருவாய்‌ கோட்டாட்சியர்‌ (பொள்ளாச்சி) ரவிக்குமார்‌, உதவி இயக்குநர்‌ (பேரூராட்சிகள்‌) துவாரகநாத்‌ சிங்‌, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்‌(மகளிர்‌ திட்டம்‌) செல்வராசு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலர்‌ மணிமொழி, மாவட்ட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நல அலுவலர்‌ பிரபாகரன்‌, மாவட்ட சமூக நல அலுவலர்‌ தங்கமணி, வட்டாட்சியர்‌(பொள்ளாச்சி) தணிகைவேல்‌ உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....