கோவையில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் கைகலப்பு; 9 இளைஞர்கள் கைது

கோவை: கோவை சரவணம்பட்டி காவல் எல்லையில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைப்பதில் தகராறு ஏற்பட்டு இரு குழுவினரும் தாக்கிக் கொண்ட சம்பவத்தையடுத்து ஒன்பது இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை: கோவை சரவணம்பட்டி காவல் எல்லையில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைப்பதில் தகராறு ஏற்பட்டு இரு குழுவினரும் தாக்கிக் கொண்ட சம்பவத்தையடுத்து ஒன்பது இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமீப காலமாக ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் பலர் தங்களது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைக்கின்றனர். அதில் தங்களது மகிழ்ச்சி, வருத்தம், கோபம் என அனைத்தையும் பதிவு செய்கின்றனர். இப்படி ஒருவரை பற்றி பொதுவாக ஸ்டேட்டஸ் வைப்பதால் பல நேரங்களில் பிரச்சனைகளும் ஏற்படுகிறது.

இந்த நிலையில், கோவை சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த வீரபாண்டிக்கும் அவரது நண்பரான சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்த தனுஷ் குமார் என்பவருக்கும் இடையே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.



இந்த தகராறு ஒரு கட்டத்தில் முற்றிப்போய் தனுஷ் குமார் தன் நண்பர்களான மோகன்ராஜ், கார்த்திக், அருண், அஜித் குமார், சதீஷ்குமார், சந்தோஷ் குமார் ஆகியோரை துணைக்கு அழைத்துச் சென்று வீரபாண்டியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் வீரபாண்டி காயமடைந்ததையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து, வீரபாண்டிக்கு ஆதரவாக சம்பவ இடத்திற்கு வந்த பிரசாந்த், வசந்தகுமார், கோபால கிருஷ்ணன் ஆகியோர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பின்னர் தகவலறிந்து வந்த சரவணம்பட்டி போலீசார், தனுஷ் குமார், அருள், அஜீத்குமார், சந்தோஷ்குமார், பிரசாந்த், வீரபாண்டி, வசந்தகுமார், கோபால கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தப்பியோடிய சதீஸ் மற்றும் கௌதம் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைப்பதில் இரண்டு குழுவினருக்குள் நடந்த தாக்குதல் சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...