உதகையில் தொடர் மழையால் வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர்; அதிகாரிகள் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்

நீலகிரி: உதகையில் இரவு முழுவதும் பெய்த தொடர் மழைக்குக் காந்தள் பகுதியில் 60க்கும் மேற்பட்ட வீடுகளில் கழிவு நீர் புகுந்தது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தும் அதிகாரிகள் வராத காரணத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் உதகை காந்தள் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நீலகிரி: உதகையில் இரவு முழுவதும் பெய்த தொடர் மழைக்குக் காந்தள் பகுதியில் 60க்கும் மேற்பட்ட வீடுகளில் கழிவு நீர் புகுந்தது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தும் அதிகாரிகள் வராத காரணத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் உதகை காந்தள் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்று இரவு விடிய விடிய பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் கடும் குளிரில் தங்களது குழந்தைகளுடன் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

குறிப்பாக காந்தள் பகுதியில் 60க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வந்ததால், அதை சுத்தம் செய்ய உதகை நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை தொலைபேசியில் தகவல் அளித்தும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வராததால் உதகை நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கிராமப்புறங்களில் இருந்து உதகைக்கு வர வேண்டிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தாமதமாக வந்த அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதியை உடனடியாக சரி செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....