கோவையில் கொடிக்கம்பம் விழுந்து பெண் விபத்துக்குள்ளான சம்பவம்; அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கோவை: கோவையில்‌ அனுராதா என்பவர் விபத்துக்குள்ளானதற்கு அதிமுக கொடிக்‌கம்பம்‌ சரிந்து விழுந்ததே காரணம் என்றும்‌ அதிமுகவினரின்‌ விளம்பர வெறியால் மேலும்‌ ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களது விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


கோவை: கோவையில்‌ அனுராதா என்பவர் விபத்துக்குள்ளானதற்கு அதிமுக கொடிக்‌கம்பம்‌ சரிந்து விழுந்ததே காரணம் என்றும்‌ அதிமுகவினரின்‌ விளம்பர வெறியால் மேலும்‌ ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  இவர்களது விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை கோல்ட்வின்ஸ் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளம் பெண் திடீரென அதிமுக கொடிக்கம்பம் விழுவதைக் கண்டு வாகனத்தை நிறுத்த முற்பட்டதில் விபத்துக்குள்ளாகி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.



கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்ற அனுராதா(30). இவர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று பணிக்கு செல்வதற்காக, அனுராதா தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார், அப்போது கோல்டுவின்ஸ் அருகே செல்லும்போது, அதிமுக கொடி கம்பம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. அதை கண்ட அவர் உடனடியாக இருசக்கர வாகனத்தை நிறுத்த முற்பட்டபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது, அந்த வழியே வந்த லாரி அனுராதாவின் கால் மீது ஏறியது. இதில் பலத்த காயமடைந்த இளம்பெண்ணை அருகே இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதைத்தொடர்ந்து, பீளமேடு போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அனுராதா என்பவர் விபத்துக்குள்ளானதற்கு அதிமுக கொடிக்‌கம்பம்‌ சரிந்து விழுந்ததே காரணம் என்றும்‌ அதனை காவல்துறையினர் மறைப்பதாக குற்றம்சாட்டியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக-வினரின்‌ விளம்பர வெறியால் மேலும்‌ ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களது விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....