நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ஏ.டி.எம் மையங்கள் பராமரிப்பின்றி இருப்பதால், கால்நடைகள் உள்ளே புகுந்து உறங்குவதும், மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் பணம் எடுக்கச் செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

தென்னிந்தியாவின் முக்கிய கோடை சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்துக்கு, ஆண்டுதோறும் சுமார் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சில மாதம் உறைபனி, அவ்வப்போது சாரல் மழை, கோடை மழை என எல்லா சீசன்களிலும் குளிருக்குப் பஞ்சம் இருக்காது.
இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் குன்னூரில் போதிய அளவு ஏ.டி.எம் மையங்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுற்றுலா வரும் பயணிகள் தங்களின் தேவைக்காக பணம் வங்கிகளில் வைத்திருந்தும் அதனை உபயோகிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
இதனிடையே, குன்னூர் பெட்ரோல் பங்க் அருகில் இயங்கி வரும் இந்தியன் வங்கி ஏ.டி.எம் முறையான பராமரிப்பும், பாதுகாவலருமின்றி இருப்பதால் மழைக்காலங்களில் அப்பகுதியில் சுற்றித்திரியும் நாய், மாடு போன்ற விலங்குகளின் தங்குமிடமாக மாறியுள்ளது.
மேலும், ஏ.டி.எம் மையங்களை தங்களது உறைவிடமாக பயன்படுத்தும் மாடு, நாய் போன்ற விலங்குகள், அதனுள் மலம் கழித்துச் செல்வதால் ஏ.டி.எம் மையங்கள் துர்நாற்றம் வீசி காணப்படுகிறது. இதனால் குன்னூரில் இயங்கி வரும் ஒரு சில ஏ.டி.எம் மையங்களும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தாத நிலையில் உள்ளது.
இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் அதிகமாக காணப்படும் குன்னூரில் போதுமான அளவு ஏ.டி.எம் மையங்களை அமைத்து, உரிய பாதுகாவலருடன் முறையாக பராமரிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.