கோவை: கோவையில் அதிமுக கொடிக்கம்பத்தால் பெண் விபத்தில் சிக்கியதாக இதுவரை தகவலும் வரவில்லை எனவும் அதேசமயம் பேனர் வைக்கக் கூடாது என்பதுதான் நீதிமன்ற உத்தரவு தவிர, கொடிக்கம்பம் வைப்பது தொடர்பாக எந்த உத்தரவும் இதுவரை இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் அதிமுக கொடிக்கம்பத்தால் பெண் விபத்தில் சிக்கியதாக இதுவரை தகவலும் வரவில்லை எனவும் அதேசமயம் பேனர் வைக்கக் கூடாது என்பதுதான் நீதிமன்ற உத்தரவு தவிர, கொடிக்கம்பம் வைப்பது தொடர்பாக எந்த உத்தரவும் இதுவரை இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோல்டு வின்ஸ் பகுதியில் நேற்று முதல்வர் எடப்பாடி வருகைக்காகவும், அதிமுக இல்ல திருமண நிகழ்ச்சிக்காகவும் அதிமுக கொடிகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது.
அப்போது, அந்த வழியாக தனது இருசக்கர வாகனத்தில் சென்ற அனுராதா (22) என்ற இளம்பெண்ணின் மீது அதிமுக கொடி கம்பம் சாய இருந்த நிலையில், தடுமாறிய அந்த பெண் மீது பின்னால் வந்த லாரி மோதியதில் அந்த பெண்ணின் இரண்டு கால்களிலும் பலத்த காயமடைந்து நீலாம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கோவையில் அதிமுக.கொடிக்கம்பம் சாய்ந்து விபத்தில் சிக்கிய பெண் குறித்து பதிலளித்த அவர், அதிமுக கொடிக்கம்பத்தால் பெண் விபத்தில் சிக்கியதாக இதுவரை தகவலும் வரவில்லை என்றார். அதே சமயம், பேனர் வைக்கக் கூடாது என்பதுதான் நீதிமன்ற உத்தரவு தவிர, கொடிக்கம்பம் வைப்பது தொடர்பாக எந்த உத்தரவும் இதுவரை வரவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யாத அமமுக என்பது கட்சியே இல்லை என்று கூறிய அவர், பணிகள் அதிகம் இருப்பதால் உள்ளாட்சித் தேர்தலில் முன்கூட்டியே விருப்ப மனு பெறுவதாகவும், மேயர் தேர்தல் நேரடியாகவே இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டதாக கூறினார்.
மேலும், நடிகர் கமலஹாசன் வயது முதிர்வு ஏற்பட்டு, திரைத்துறையில் வாய்ப்பில்லாததால் கட்சி தொடங்கியுள்ளதாக விமர்சனம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உலகத்தரத்தில் சாலைகள் அமைப்பதற்கு தமிழகத்தில் நிலம் எடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் நீடிப்பதாகவும், சாலை விரிவாக்க பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.