மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து இன்று ஒரு நாள் ரத்து; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கோவை: மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து தண்டவாளத்தில் பாறை விழுந்ததால் இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

கோவை: மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து தண்டவாளத்தில் பாறை விழுந்ததால் இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி இயக்கப்படும் மலை ரயில் போக்குவரத்து யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய சின்னம். அடர்ந்த வனத்தில் பயணிக்கும் இந்த மலை ரயிலில் பயணம் செய்து காடுகளில் உள்ள இயற்கை அழகினை கண்டு ரசிக்கவும் குகைகளில் புகுந்து செல்லும் மலை குகைகளை காணவும் உள்நாடு மட்டுமின்றி ஏராளமான வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளும் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். 

இந்த நிலையில், வட கிழக்கு பருவமழை துவங்கியது முதலே மலை ரயில் பாதை அமைந்துள்ள மேட்டுப்பாளையம், கல்லார் மற்றும் நீலகிரி பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மலைரயில் பாதையில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் நேற்று இரவு கல்லார், ஆடர்லி, ஹில்கிரோ போன்ற மலை ரயில் பாதை அமைந்துள்ள வனப்பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் ஆடர்லி ஹில்கிரோ ரயில் நிலையம் இடையே மண்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் உருண்டு, மலை ரயில் பாதையில் விழுந்து தண்டவாளம் சேதமானது. 

இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் புறப்பட்டுச் சென்ற மலை ரயில் நடுக்காட்டில் நிறுத்தப்பட்டு தண்டவாள சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் ராட்சத பாறையை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்த முடியாததால் மலை ரயில் தொடர்ந்து பயணிக்க முடியாமல் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது. 

இதனையடுத்து 150 சுற்றுலா பயணிகளுடன் சென்ற மலை ரயில் கல்லார் வரை பயணிகளுடன் திருப்பிவிடப்பட்டு அங்கிருந்து ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த அரசுப்பேருந்து மூலம் குன்னூர் அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால் மலை ரயில் பயணித்து இயற்கை அழகினை கண்டு ரசிக்கக் காத்திருந்த சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....