கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள சோலையார் அணை அருகே உள்ள மழுக்கப்பாறை எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள வனத்துறையின் சோதனைச்சாவடியிள் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஊழியர்களை தாக்க முற்பட்ட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வழக்கமாக, கேரளா மாநிலம் சாலக்குடியிலிருந்து வால்பாறைக்கு ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இந்த வாகனங்கள் சோதனைச்சாவடியில் சோதனைக்குப்பின் தான் அனுமதிக்கப்படும்.

இந்நிலையில், இன்று கேரள மாநிலம் நெம்மாராவிலிருந்து வால்பாறை வழியாக மழுக்கப்பாறையில் திருமண நிகழ்ச்சிக்கு ஒன்றில் பங்குபெற காரில் 10 பேர் வந்துள்ளனர். அப்போது, சோதனை சாவடியில் சோதனையிட்ட போது காரில் மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் அவர்களை வனத்துறை ஊழியர்கள் விசாரணை செய்ய முற்பட்டனர்.
அப்போது, காரில் இருந்த பயணிகள் வனத்துறை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், மேலும் தகாத வார்த்தைகள் பேசி வனத்துறை ஊழியர்களை தாக்க முற்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் வனத்துறையினரை தாக்க முயன்ற கேரளாவைச் சேர்ந்த குமார், ஷாபு, ஷிபு, அப்துல், சிவராஜ் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் வனத்துறையினர மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.