கோவை: கோவை கோல்ட்வின்ஸ் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளம் பெண் திடீரென அதிமுக கொடிக்கம்பம் விழுவதைக் கண்டு வாகனத்தை நிறுத்த முற்பட்டதில் விபத்துக்குள்ளாகி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்ற அணுராதா(30). இவர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று பணிக்கு செல்வதற்காக, அணுராதா தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார், அப்போது கோல்டுவின்ஸ் அருகே செல்லும்போது, அதிமுக கொடி கம்பம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. அதை கண்ட அவர் உடனடியாக இருசக்கர வாகனத்தை நிறுத்த முற்பட்டபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது அந்த வழியே வந்த லாரி அணுராதாவின் கால் மீது ஏறியது. இதில் பலத்த காயமடைந்த இளம்பெண்ணை அருகே இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதைதொடர்ந்து, பீளமேடு போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.