மருத்துவ மாணவர்கள் பயிற்சிக்காக கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.120 கோடி செலவில் புதிய மருத்துவமனை

கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இளநிலை பிரிவு மருத்துவ மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் ரூ.120 கோடி செலவில் 500 படுக்கைகளுடன் கூடிய புதிய மருத்துவமனை அமைய உள்ளது.

கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இளநிலை பிரிவு மருத்துவ மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் ரூ.120 கோடி செலவில் 500 படுக்கைகளுடன் கூடிய புதிய மருத்துவமனை அமைய உள்ளது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி அவினாசி சாலையிலும், அரசு மருத்துவமனை திருச்சி சாலையிலும் செயல்பட்டு வருகிறது. இதனால் பயிற்சி வகுப்பிற்காக மருத்துவ மாணவர்கள் தினமும் 8 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அதேபோல, அவினாசி சாலையில் அதிகம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் தேவையற்ற காலவிரயம் ஆகிறது.

இதனையடுத்து மருத்துவ கவுன்சில், பயிற்சி பெறும் மாணவர்கள் எளிமையாக கற்றுக்கொள்ள பயிற்சி மருத்துவமனைகள் கல்லூரி வளாகத்திலேயே இருக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து எழுந்த கோரிக்கையின் பேரில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்திலே மருத்துவமனை கட்டுவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இளநிலை பிரிவு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தும் வகையில் 500 படுக்கைகளுடன் கூடிய கட்டடம் கட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது.

ரூ.120 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள புதிய மருத்துவமனைக்கு மத்திய அரசு 60 சதவீதமும் மாநில அரசு 40 சதவீத நிதியும் வழங்க உள்ளது. இளநிலை மருத்துவர்கள் பயிற்சி பெறும் வகையில் அமைய உள்ள இம்மருத்துவமனை வளாகத்தில் ஆய்வகம், நூலகம், கருத்தரங்க கூடம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.

மேலும், புதிய மருத்துவமனையால் மாணவர்கள், ஆசிரியர்களின் அலைச்சல் குறைவதுடன் மக்கள் புதிய மருத்துவமனையிலே சிகிச்சை பெறும் வாய்ப்பும் உள்ளதாக அரசு மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் அசோகன் தெரிவித்துள்ளார். 

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....