நீலகிரி: திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி நீலகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உதகை ஏ.டி.சி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த விடுதலை சிறுத்தை கட்சியினர் 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரு இடங்களில் திருவள்ளுவர் சிலைக்கு காவியுடை அணிவித்தும் ருத்ராட்ச மாலை அணிவித்தும் பூஜை செய்து கலங்கப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என உதகையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளுவருக்கு காவியுடை அணிவித்த பா.ஜ.க வினர் மற்றும் சாணம் வீசி கலங்கப்படுத்திய கயவர்கள் மீதும், சமூக விரோதிகள் மீதும் தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய விடுதலை சிறுத்தை கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.