உதகையில் தேநீர் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி

நீலகிரி: உதகையில் தேநீர் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை தென்னிந்திய வாரியத்தின் செயல் இயக்குநர் பாலாஜி அவர்கள் துவக்கி வைத்தார். இதில் மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நீலகிரி: உதகையில் தேநீர் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை தென்னிந்திய வாரியத்தின் செயல் இயக்குநர் பாலாஜி அவர்கள் துவக்கி வைத்தார். இதில் மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



தென்னிந்திய தேயிலை வாரியம் மற்றும் ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தேயிலை மேம்பாட்டிற்காக மகளிர் சுய உதவிக் குழுக்கள் கலந்து கொண்ட பேரணி உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் துவங்கியது.

இதில் கலந்து கொண்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் தேநீர் பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணி சென்றனர். காபி ஹவுஸ் சந்திப்பில் துவங்கிய பேரணியானது கமர்சியல் சாலை, சேரிங் கிராஸ் போன்ற முக்கிய வீதிகள் வழியே அரசு தாவரவியல் பூங்கா அருகில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நிறைவடைந்தது.

இந்தப் பேரணியில் மகளிர் திட்ட இயக்குனர் பாபு மற்றும் அத்துறையைச் சார்ந்த அரசு அதிகாரிகளும், பெண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....