நீலகிரி: உதகை அருகே மேலூர் ஊராட்சிக்குட்பட்ட மேல் தைலமலை பகுதியில் அடிப்படை வசதிகளை கேட்டும் குப்பைகளை தரம் பிரிக்கும் இயந்திரத்தை அப்பகுதியில் வைக்கக் கூடாது என 200 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

இப்பகுதியை சுற்றியுள்ள சுமார் ஐந்துக்கு மேற்பட்ட கிராமங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் குறிப்பாக பேருந்து வசதியும் குடிநீரும் வழங்க வேண்டும் என முக்கிய கோரிக்கையாக இப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்துள்ள நிலையில், இப்பகுதியில் குப்பை பிரிக்கும் இயந்திரம் நிறுவப்பட உள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ஏற்படக்கூடிய பல்வேறு நோய்களால் குழந்தைகள் பெண்கள் மற்றும் வயதானவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
அதனால், இப்பகுதியில் நிறுவப்பட உள்ள குப்பை இயந்திரத்தை அப்பகுதியில் வைக்க கூடாது எனவும் இயந்திரம் வைத்தால் அப்பகுதி உள்ள பொதுமக்கள் மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.